பதிவு செய்யப்படாத NGOக்கள் பணிபுரிய அனுமதி இல்லை!

Date:

பதிவு செய்யப்படாத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நாட்டில் பணிபுரிய அனுமதி வழங்கப்படவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்தில்கொண்டு காலி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துவதற்கு காலி உதவி மாவட்ட செயலாளரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

உதவி மாவட்ட செயலாளரினால் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டத்தில் பங்கேற்காத நிறுவனங்களின் பதிவுகளை இரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த அரச சார்பற்ற நிறுவனங்களின் தகவல்களை தேசிய செயலகத்திற்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காலி உதவி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சிக்கல் நிலைமைகள் காரணமாக பதிவு செய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனங்கள் நாட்டில் செயற்படுவதற்கு அனுமதி இல்லை என பாதுகாப்பு அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...