அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செப்டெம்பர் முதல் பாராளுமன்ற வாரத்தில் நாட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.