வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

Date:

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

உலகம் முழுவதும் அரசியல், வன்முறை மற்றும் போர் போன்ற காரணிகளால் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவலுக்காகக் காத்திருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்த தினத்தை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் 2011ஆம் ஆண்டு முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இம்முறை “அவர்களை நினைவு கூறுவோம், அவர்களை மறக்க மாட்டோம்” என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால யுத்தம் மற்றும் அதற்கு பின்னரான காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களே இவ்வாறு இந்த தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர்.

இலங்கையிலும் இறுதிக்கட்ட போரின் போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வௌிப்படுத்துமாறு வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று வடகிழக்கில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வடக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், சட்டத்தரணிகள், அருட்தந்தையர்கள் உட்பட பலர் இணைந்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தியும், காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்களை சுமந்து கொண்டும் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...