பேஷ் இமாம்கள் மற்றும் முஅத்தீன்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு.

Date:

ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒலுவில் கிளையின் ஏற்பாட்டில்  பேஷ் இமாம்கள் மற்றும் முஅத்தீன்களுக்கான வழிகாட்டல் செயலமர்வொன்று நேற்றைய தினம் இடம்பெற்றது.
மர்ஹூம் இஸ்மாலெவ்வை அப்துல் கபூர் பவுண்டேஷன் அமைப்பின் முழுமையான அனுசரணையில் உலமா சபைத் தலைவர் ஏ.எல்.பைஸல் (மதனி) அவர்களது தலைமையில் இந்த செயலமர்வு நடைபெற்றது.
பேஷ் இமாம்கள் மற்றும் முஅத்தீன்களை வலுவூட்டல் எனும் தலைப்பில் மேற்படி செயலமர்வு வடிவமைக்கப்பட்டிருந்தது.
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.இஸ்மாயில் (ஸலபி) அல்-ஹாபிழ் என்.எம்.அப்துல் அஹத் (ஷர்கி) ஆகிய வளவாளர்களால் வழிகாட்டல் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும் முஅத்தீன்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு அதான் சொல்லுவது பற்றிய நுணுக்கங்கள் விவரிக்கப்பட்டன.
ஒலுவில் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பணிபுரியும் பேஷ் இமாம்கள் மற்றும் முஅத்தீன்கள் ஆகியோர்களுடன் பள்ளிவாசல்களின் செயற்பாடுகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள், பள்ளிவாசல் நிருவாகிகள் அடங்கலாக சுமார் 40க்கும் உட்பட்டவர்கள் இச்செயலமர்வில் பங்குபற்றி இருந்தனர்.

மேற்படி கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் கொடுத்து கௌரவிக்கப்பட்டன. இந்நிகழ்வு நேரடியாக ஒலுவில் மீடியா குறூப் மூலமாக அஞ்சலி செய்யப்பட்டது.

மேற்படி செயலமர்வு ஒலுவில் வரலாற்றில் பள்ளிவாசலில் கடமை புரிகின்றவர்களுக்காக நடாத்தப்பட்ட  முதல் தடவையாக இடம்பெற்றுள்ளது.

ஜம்இயத்துல் உலமா சபை இது போன்ற செயற்பாடுகளை அடிக்கடி முன்னெடுக்க வேண்டும் என கலந்து கொண்டவர்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இச்செயலமர்வின் போது ஒலுவில் மீடியா குழுவின் செயற்பாடுகளைக் கௌரவித்து உலமா சபையினால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...