சிங்கள மக்கள் தான் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் காணிகளை பலவந்தமாக பிடித்தவர்கள்:முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

Date:

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் காணிகளை பலவந்தமாக பிடித்துதான் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். தவறு எமது பக்கத்தில்தான் உள்ளது என்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

காணி அதிகாரம் வழங்கினால் வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் காணிகளை பலவந்தமாக பிடித்துக்கொள்ளலாம் என்ற கருத்து பரவலாக பரப்பட்டு வருகின்றது. இது தவறான கருத்ததாகும்.

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் காணிகளை பிடித்துக்கொள்ளவில்லை. தமிழர்களின் காணிகள் பிடிக்கப்பட்டுதான் சிங்கள குடியேற்றங்கள் அமர்த்தப்பட்டுள்ளன.

இதனை நான் சொல்வதால் என்னை சார்ந்தோர் என்னை திட்டலாம். இருப்பினும் இதுவே உண்மை.

கல்லோயா திட்டம், வெலிஓயா திட்டம் என்பவற்றுக்கான காணி வடக்கு மக்களுக்குரியது. ஆனால் தற்போது அங்கு பலவந்தமாக இராணுவத்தினர் குடும்பமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

சிலவேளை காணி அதிகாரம் வழங்கினால் அரச காணிகள் பறிபோகலாம் என்ற ஐயப்பாடு சிலருக்கு உள்ளது.

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், மாகாண அரசுடன் பேச்சு நடத்தி, அபிவிருத்திக்காக மத்திய அரசு தேவையான காணியை பெறலாம்.

தனிநபர்களுக்கு காணி வழங்குவதாக இருந்தால் அதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குதான் உள்ளது. மாறாக மாகாணசபைகளுக்கு அல்ல” எனத் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...