இலங்கையில் இரண்டு புதிய மாதுளை வகைகள் கண்டுபிடிப்பு!

Date:

ஒரு ஆராய்ச்சியைத் தொடர்ந்து, இலங்கையில் வெற்றிகரமாக பயிரிடக்கூடிய அதிக மகசூலைத் தரும் இரண்டு புதிய வகை மாதுளை வகைகளை விவசாயத் திணைக்களம் கண்டறிந்துள்ளது.

இரண்டு புதிய மாதுளை வகைகளும் இலங்கையில் பயிரிடுவதற்கு ஏற்றது எனவும், அவர்களின் முயற்சிகள் மிகவும் வெற்றியடைந்துள்ளதாகவும் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

அதிக மகசூல் மற்றும் மிகவும் இனிப்புடன் கூடிய இவ்விரு ரகங்களும் அடுத்த சில மாதங்களில் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து பெருமளவிலான மாதுளை மற்றும் விதைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால், ஆண்டுதோறும் பெருமளவு அன்னியச் செலாவணியை அரசு இழக்கிறது.

இந்நிலைமையை தவிர்க்கும் நோக்கில் விவசாயத் திணைக்களத்தினால் இரண்டு புதிய மாதுளை ரகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

உலர் வலயங்களில் பயிரிடக்கூடிய இந்த இரண்டு புதிய இரகங்களும் தற்போது நுரைச்சோலை மற்றும் வீரவில விவசாய ஆராய்ச்சிப் பண்ணைகளில் பயிரிடப்பட்டு வெற்றியடைந்துள்ளன.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...