உத்திக பிரேமரத்ன எம்.பி. மீதான துப்பாக்கிச் சூடு: விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம்

Date:

பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான உத்திக பிரேமரத்னவின் கார் மீது நேற்று (17) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது நேற்று இரவு 10.40 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அனுராதபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

தனது வேலைகளை முடித்துகொண்டு வீடு திரும்பும் வேளையில் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அப்போது காரில் உத்திக பிரேமரத்ன மட்டுமே இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

காரின் இடதுபக்கம் பின் இருக்கையில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகவும், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆகவே, இதுதொடர்பிலான விசாரணைகள் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...