கொழும்பு துறைமுக நகரம் கொழும்பு நிதி நகரம் (பினான்சியல் சிட்டி ) என பெயர் மாற்றம் செய்யப்படலாம் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டம் தொடர்பான உத்தரவுகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
துறைமுக நகரத் திட்டத்திற்கு இதுவரை 17 ஊக்குவிப்பாளர்கள் வந்துள்ளனர்.
துறைமுக நகரத் திட்டத்தின் பெயரில் சிறிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போர்ட் சிட்டி கொழும்பு நிதி நகரமாக மாற்றப்பட வாய்ப்புள்ளது. ஆனால் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார்