அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

Date:

சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது.

அனைத்து சதொச நிறுவனங்களிலும் இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிவப்பு பருப்பு, பெரிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு, நெத்தலி, கிழங்கு மற்றும் சோயாமீட் ஆகியவற்றின் விலைகள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சிவப்பு பருப்பு கிலோ ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டு 299 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 195 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

வெள்ளைப்பூண்டு கிலோ ஒன்றின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு 620 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நெத்தலியின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், கிழங்கின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், சோயாமீட்டின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்த்துள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...