ரஷ்யா-உக்ரைன் போரில் சமீப காலமாக இரு நாடுகளும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக நேற்று அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷ்யா சரமாரியாக டிரோன் தாக்குதல் நடத்தியது.
இதில் அங்கு பல குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் சேதமடைந்தன.
மேலும் இந்த தாக்குதலில் உக்ரைனின் தெற்கே உள்ள கெர்சோன் நகரில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 18 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.