சமாதானத்துக்கும் ஒற்றுமைக்குமான “ரோசா மிரா” சர்வதேச விருது அஷ்ஷெய்க்.ரிஸ்வி முப்திக்கு!

Date:

ரஷ்யாவின்  தத்ரிஸ்தான் காசானில் “அல்குர்ஆனை உலகளாவிய மயப்படுத்துவதில் நவீன தொழில்நுட்பத்தின் பங்களிப்பு” எனும் தொனிப்பொருளில் சர்வதேச இஸ்லாமிய மாநாடொன்று கடந்த 18,19 ஆம் திகதிகளில்
இடம்பெற்றது.

இந்த மாநாடு அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் கற்கைக்கான மத்திய நிலையத்தின் கௌரவத் தலைவர் முப்தி பரீத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அம்மாநாட்டில் ரஸ்யாவின் தத்ரிஸ்த்தான் மாநிலத்தின் பல்வேறு முக்கிய பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் அம்மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சார்பாக, ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் உப செயலாளர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.ஸி.எம். பாழில் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த மாநாட்டில் கலந்துகொண்ட உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகள், ‘அல்குர்ஆனை உலகளாவிய மயப்படுத்துவதில் நவீன தொழில்நுட்பம்’ தொடர்பில் தமது ஆய்வுகளை முன்வைத்து உரையாற்றினர்.

அந்தவகையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். றிஸ்வி அவர்களும் “அல்குர்ஆனைப் பரப்புவதில் தொழில்நுட்பத்தின் சாதக, பாதகங்களும் அவற்றை வெற்றிகரமாகக் கையாள்வதற்கான வழிமுறைகளும்” எனும் தலைப்பில் விரிவான ஆய்வொன்றை அரபு மொழியில் முன்வைத்து உரையாற்றினார்கள். அத்துடன் எமது தாய்நாடான இலங்கையைப் பற்றியும் சுருக்கமாக முன்வைத்தார்கள்.

குறித்த உரை மாநாட்டில் கலந்துகொண்ட பல்வேறு தரப்பினரதும் மதிப்பைப் பெற்றதுடன் அவர்களது கவனத்தையும் ஈர்த்தமை குறிப்படத்தக்கது.

மேலும் அம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். றிஸ்வி அவர்கள், உலகளாவிய ரீதியில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் நிலைநாட்டச் செய்வதில் பங்களிப்புச் செய்பவர்களை கௌரவிக்கும் ரஸ்யா நாட்டின் கௌரப் பட்டமான “றோஸ்மி றாசா” எனும் பட்டமும் தங்கப் பதக்கமும் வழங்கி, பொன்னாடைபோற்றி கௌரவிக்கப்பட்டார்கள்.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் (UNESCO) கீழ் இயங்கும் அமைதிக் கலாசார நிறுவனத்தின் போசகரும், ஆசிய, ஐரோப்பிய நீர்வளவியல் வரைபடங்களுக்கான அமைப்பின் தலைவருமான  டாக்கிரோவ் ஏஞ்சல் றிசாகோவிச் அவர்கள் இக்கௌரவப் பட்டத்தை வழங்கி கௌரவித்தமை சிறப்பம்சமாகும்.

 

Popular

More like this
Related

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...