ஒக்.04 சகல பாடசாலைகளிலும் மீலாத் விழா நடத்தவும் ஒருவாரத்துக்கு பாடசாலைகளை இஸ்லாமிய கலாசாரத்தால் அலங்கரிக்கவும் கல்வி அமைச்சு வேண்டுகோள்!

Date:

ஒக்டோபர் 04 ஆம் திகதி நாடு முழுவதிலுமுள்ள முஸ்லிம் பாடசாலைகளிலும், முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளிலும் முஸ்லிம் சமய விழுமியங்களை மேம்படுத்தும் வகையில் மீலாதுன் நபி விழா கொண்டாடப்படுதல் வேண்டுமென கல்வி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிகழ்வுகளில் தாய் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் சுபீட்சமும், சௌபாக்கியமும் கிடைக்கப் பெற பிரார்த்திக்குமாறும் கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பான கல்வி அமைச்சின் ஓகஸ்ட் 29 ஆம் திகதிய ED/09/55/03/01/01 இலக்க சுற்றறிக்கை சகல முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் ஏனைய பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதிபர்கள் இவ்விடயம் பற்றி சகல ஆசிரியர்களுக்கும், கல்வி சாரா உத்தியோகத்தர்களுக்கும் முன்கூட்டியே தெரியப்படுத்துவதுடன் பாடசாலையில் மீலாதுன் நபி விழா நடாத்தப்படும் விதம் தொடர்பாக தீர்மானித்து, பாடசாலையின் சகல மாணவ, மாணவிகளுக்கும் அதுபற்றி அறிவித்தல் வேணடும் எனவும், இவ்விழாவில் மதகுருமார், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகம் சார்ந்தவர்களை பங்குபற்றச் செய்து, கல்வி நடவடிக்கைகளுக்கு பாதகமில்லாதவாறு நடாத்தப்படுதல் வேண்டும் எனவும் அவ்வாரத்தில் பாடசாலையும், பாடசாலைச் சூழலும் சுத்தம் செய்யப்பட்டு இஸ்லாமிய கலாச்சார அம்சங்களுடன் நேர்த்தியான முறையில் அலங்கரிக்கப்படுதல் வேண்டுமெனவும் கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

சகல பாடசாலைகளும் ஒக்.04 ஆம் திகதி ஒரே தினத்தில் தேசிய ரீதியில் மீலாதுன் நபி விழாவினை வெற்றிகரமாக நடாத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...