ஈராக்கில் பயங்கர தீ விபத்து: 100 பேர் பலி; உயிரிழப்பு உயரும் அச்சம்!

Date:

ஈராக்கில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஈராக்கின் நிவேனா மாகாணத்தில் ஹம்தானியா என்ற இடத்தில் கிறிஸ்தவர்கள் குடும்பத்தில் திருமணம் நடைபெற்றது. இத்திருமண நிகழ்ச்சியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ சிறிது நேரத்திலேயே ஒட்டுமொத்த அரங்கம் முழுவதும் பரவியது. இதனால் அரங்கத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோர் தீ விபத்தில் சிக்கினர். 100 பேர் சம்பவ இடத்திலேயே கருகி மாண்டனர்.

இ த்தீவிபத்தில் சிக்கி படுகாயமடைந்த 150 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குமாறும் ஈராக் பிரதமர் முஹம்மது ஷியா அல்-சுடானி உத்தரவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...