கம்பஹ வலய தமிழ் மொழி மூல பாடசாலைகள் இணைந்து இரண்டு நாட்களாக
(செப்டம்பர் 25, 26) நடாத்தி முடித்த தரம் 1 முதல் 5 வரையான ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கண்காட்சி வெற்றிகரமாக இடம்பெற்றது.
கண்காட்சியின் முதல் நாள் நிகழ்வுகளில் வலயக் கல்விப் பணிப்பாளர் M.A. அநுர பிரேமலால், ஆரம்பப் பிரிவு பணிப்பாளர் திருமதி. தினேஷா தரங்கனி, நிகழ்வின் இரண்டாவது நாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஹர்ஷ எதிரிசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கம்பஹா மற்றும் களனி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெக் எம்.டி.எம். தௌசீர் கூறுகையில்,
எட்டு தமிழ் மொழி மூலப்பாடசாலைகளின் அதிபர்கள்,பிரதி அதிபர்கள் ஆரம்பப்பிரிவுத் தலைவர்கள், ஆரம்பப் பிரிவு வகுப்பாசிரியர்கள் கணகாட்சி இணைப்பாளர்கள் பாடசாலை பெற்றார் இணைப்பாளர்கள் மற்றும் இந்த கண்காட்சியை சிறப்பாக செய்துமுடிக்க பணத்தாலும், பொருளாலும், உழைப்பாலும், பொன்னான நேரத்தினாலும் சிறிதும் தயங்காது.
போக்குவரத்துச்செலவினங்களையும், ஏனைய செலவினங்களையும் பொறுப்பெடுத்து பிள்ளைகளுக்கு ஆக்கங்களை செய்ய உதவிய பெற்றோர் பாதுகாவலர்களுக்கும், ஆக்கங்களை ஊக்கத்தோடு செய்வதில் பங்கேற்ற “ஊற்றெடுக்கும் அருவிகளின்” அறிவின் ஊற்றுக்களான அன்பின் ஆரம்பப்பிரிவு மாணவச் செல்வங்களுக்கும் எனது விசேட நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அடுத்து ஊற்றெடுக்கும் அருவிகளுக்கு களமமைத்துக்கொடுத்த தாருஸ்ஸலாம் பாடசாலை அதிபர், ஆசிரிய ஆலோசகர்களுக்கும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,வாத்தியக் குழுவினருக்கும் அதன் பயிற்றுவிப்பாளருக்கும் கண்காட்சி ஒழுங்குகளை மேற்கொள்ள உதவிய சகல பெற்றோர்களுக்கும் இதய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தேவையான நேரத்தில் உபகரணங்களைத் தந்துதவிய அல் அஸ்ஹர் மத்தி கல்லூரி அதிபர் ,பிரதி அதிபர்களுக்கும் கண்காட்சியில் பங்குபற்றிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இரண்டு நாட்களும் உபசரிப்பு வழங்க அனுசரனையளித்த கம்பஹா கல்வி வலயம், Colombo Tools உரிமையாளர் இக்ராம் ஹாஜியார் அவர்களுக்கும், அந்நூர் நிறுவன தலைவர் மற்றும் ஏனைய தனவந்தர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும் ஏனைய கல்வி வலயங்களில் இருந்து சிரமம் பாராது வருகை தந்து கண்காட்சியை கண்டுகளித்த அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியருக்கும், ஊற்றெடுக்கும் அருவிகளை வற்ற விடாது அவற்றை உற்சாகமாகக் கண்டுகளித்த அனைவருக்கும், பாடசாலைகளின் சமூகங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஊற்றெடுக்கும் அருவிகளில் இடையிடையே மேடை அமைத்து, அருமையான நிகழ்ச்சிகளை மேடையேற்றிய மாணவ மாணவியருக்கும், அவற்றை நெறிப்படுத்திய ஆசான்களுக்கும், ஊற்றெடுக்கும் அருவியின் அழகை மேலும் மெருகூட்டி காட்சிப்படுத்திய ‘Newsnow’ ஊடக குழு மற்றும் சகோதரர் Thihari TV றிஸ்னிக்கும் மற்றும் பெயர் குறிப்பிட மறந்த அனைவருக்கும் எனது இதய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.