கலாநிதி இல்ஹாம் மரைக்காரின் அனுசரனையில் புத்தளம் வை.எம்.எம்.ஏ கிளை உதைப்பந்தாட்ட வீரர்களுக்கு ஜேர்ஸி வழங்கி வைப்பு!

Date:

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் கலாநிதி ஏ.எம்.ஏ அஸீஸ் உதைப்பந்தாட்ட போட்டி இம்முறை திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு அரங்கில் வெகு விமரிசையாக 30 செப்டெம்பர் 2023 மற்றும் 1 ஒக்டோபர் 2023 ஆம் திகதிகளில் நடைப்பெறவுள்ளது.

மேற்படித்தொடரில் புத்தளம் அங்கத்துவ வை.எம்.எம்.ஏ கிளை சார்பான வீரர்களுக்கான ஜேர்ஸிக்களை CBS foundation அமைப்பின் ஸ்தாபகரும் , அமேசன் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி இல்ஹாம் மரைக்கார் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் மலேசியாவில் சாதனைப்படைத்த சர்வதேச ரீதியிலான மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டியில் உயரம் பாய்தலில் தங்கப்பதக்கம் வென்ற ஆசிரியர்

M. F. M. Humayoon, 200M ஓட்டப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற ஆசிரியர் M. F. M. Thufail ஆகியோருக்கான கௌரவிப்பு I soft கல்லூரியில் நேற்று முன்தினம் (2023-09-28) நடைப்பெற்றது.

இந் நிகழ்வில் புத்தளம் வை.எம்.எம்.ஏ மாவட்ட பணிப்பாளர் ஆசிரியர் எம்.டீ.எம் நபீல் , மரண விசாரணை அதிகாரியும் , மத்தியஸ்த சபை உப தலைபர்.பீ.எம் ஹிசாம், வை.எம்.எம்.ஏ கிளையின் பொறுப்புதாரியும், புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலகத்தின் மத்தியஸ்த சபை அதிகாரி முஜாஹித் நிசார் , I soft கல்லூரியின் பணிப்பாளரும் , கல்வியாளருமான அப்ராஸ் ஆசிரியர், புத்தளம் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளரும், புத்தளம் தள வைத்தியசாலையின் முகாமைத்துவ உதவியாளருமான ஜவ்ஸி ஜதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...