டுப்ளிகேஷன் வீதியில் பஸ்ஸொன்றின் மீது முறிந்து வீழ்ந்த மரம்: ஐவர் உயிரிழப்பு

Date:

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டப்பகுதியில் பஸ்ஸொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஐவர் உயிரிழந்துள்ளதாக கொள்ளுபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து காரணமாக டுப்ளிகேஷன் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அப்போது, ​​பஸ் பின்னால் வந்த பவுசர் மற்றும் கார் ஒன்றும் பஸ் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் விமானப்படையினரும் இணைந்து பேருந்தில் சிக்கிய இருவரை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அந்த வீதியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...