இலங்கையில் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பது உயிருக்கு ஆபத்து என கூறி ரஷ்ய சுற்றுலா பயணி ஒருவர் பொலிஸாரிடம் அழுது முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
ரஷ்யாவில் இருந்து விடுமுறையை கழிக்க இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய பெண் ஒருவர் கொழும்பில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணிக்கும் பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளார். அவர் பயணித்த குறித்த பேருந்தானது மணிக்கு 100km வேகத்தில் சென்றுள்ளது.
இதனால் அச்சமடைந்த குறித்த ரஷ்ய பெண் சாரதியிடம் சென்று வேகத்தை குறைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதனை சிறிதும் பொருட்படுத்தாத சாரதி வீதியின் வளைவுகளில் மிகவும் வேகமாக பேருந்தை செலுத்தியுள்ளதுடன் ஏனைய வாகனங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் முந்தியும் சென்றுள்ளார்.
‘இது எங்கள் உயிருக்கு மிகவும் ஆபத்தானது, நாங்கள் சாக விரும்பவில்லை. நாங்கள் சுற்றுலாப் பயணிகள், நாங்கள் இலங்கையைப் பார்க்க விரும்புகிறோம், நான் மிகவும் பயந்து, பேருந்தில் அழுதேன்.
இலங்கையில் உள்ள பேருந்தின் சாரதிகள் மக்களின் உயிரைப் பணயம் வைத்து வாகனத்தை செலுத்துகிறார்கள்.
நகரப் பகுதிகளிலும் நகரங்களுக்கு வெளியேயும் பேருந்துகள் ஓட்டுவதற்கு வேக வரம்புகளை விதிக்கும் விதிகளைப் பயன்படுத்தவும், மணிக்கு 60 கி.மீ வேகத்திற்கு மிகாமல் இருக்க கட்டுப்பாடுகளை விதிக்குமாறு நான் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கோரிக்கை விடுகின்றேன்
இலங்கையில் பேருந்துகளில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது, நான் பேருந்துகளில் ஏறும் போதெல்லாம், பயணத்தின் இறுதி வரை என்னைப் பாதுகாப்பாகவும் உயிருடனும் வைத்திருக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்’ என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.