ஜனாதிபதியின் சீன விஜயம் பாரிய முதலீடுகளை இலங்கைக்கு ஈர்க்கும்: முன்னாள் தூதுவர் நம்பிக்கை

Date:

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் ஊடாக கொழும்பு துறைமுக நகரத்திற்கு சீன முதலீடுகள் கொண்டு வரப்படும் என சீனாவுக்கான இலங்கை தூதுவராக பதவி வகித்து இலங்கை திரும்பியுள்ள கலாநிதி பாலித கொஹோன தெரிவித்துள்ளார்.

“கொழும்பு துறைமுக நகரத்தை நிர்மாணித்த சீன ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் ஹூனான் கன்ஸ்ட்ரக்ஷன் இன்ஜினியரிங் குரூப் கோ லிமிடெட் ஆகிய இரண்டு பெரிய சீன நிறுவனங்கள் கொழும்பு துறைமுக நகரத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது.

கண்டி வழியான மத்திய நெடுஞ்சாலையையும் சீனா அமைக்கும் எதிர்பார்ப்பில் சீனா உள்ளது. ஜனாதிபதியின் விஜயத்தின் போது இதற்கான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படும்“ – என பாலித கொஹோன கூறியுள்ளார்.

சீனாவுக்கான இலங்கையின் கடனை மறுசீரமைப்பது குறித்து பாலித கொஹோன கருத்து வெளியிடுகையில், சீனாவின் EXIM வங்கி இலங்கைக்கு உதவலாம். sri lanka haircut debt க்கு சீனா உதவும் என்ற நம்பிக்கை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

கடனைத் திருப்பிச் செலுத்துதலை ஒத்திவைக்க சீனா முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுவதுடன், கடனுதவி பெறுவதற்குப் பதிலாக சீன முதலீட்டை இலகுபடுத்துமாறு இலங்கைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துறைமுக நகரத்திலும் அம்பாந்தோட்டை துறைமுகத்திலும் முதலீடு செய்யத் தொடங்குவதன் மூலம் சீனா இலங்கையின் பொருளாதாரத்துக்கு பலமளிக்கும் என கருதப்படுகிறது.

சீன எண்ணெய் நிறுவனமான சினோபெக் இலங்கையில் எரிபொருள் விநியோக வியாபாரத்தில் அண்மையில் முதலீடு செய்தது.

இலங்கைக்கு சீனா வழங்கியுள்ள கடனைப் பற்றி கருத்து வெளியிட்டுள்ள பாலித கொஹோன, “பாரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் உடனடியாக வருவாயை எதிர்பார்க்க முடியாது.

அவை புதிய பொருளாதார நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளைத் திறக்கின்றன. அது படிப்படியாக மக்களுக்கு வருமானத்தை உருவாக்கும்.

பாதைகள், ரயில்வே மற்றும் துறைமுகங்கள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக வளரும் நாடுகள் ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவதற்கு இதுதான் காரணம்“ என்றார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...