ஆறு வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் இடைநிறுத்தம்!

Date:

நாட்டிலுள்ள ஆறு வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எக்ஸ்ரே பரிசோதனை செய்ய தேவையான பணியாளர்கள் இல்லாததே காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிரிபத்கொட ஆதார வைத்தியசாலை, மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலை, எஹலியகொட ஆதார வைத்தியசாலை, பொரளை ஆயுர்வேத போதனா வைத்தியசாலை மற்றும் இரண்டு வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் எக்ஸ்ரே பரிசோதனைப் பிரிவு மூன்று வாரங்களாக செயலிழந்துள்ளதாகவும் அவர் மேலும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...