கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெருவில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் சற்று முன்னர் தீ பரவியுள்ளது.
இந்த தீ விபத்தில் பெண் ஒருவர் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இதன்படி விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
06 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 7 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.