ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமையினால் மலையக மார்க்கமூடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கினிகம – ஹீலோயா ரயில் நிலையங்களுக்கு இடையிலேயே குறித்த ரயில் தடம் புரண்டுள்ளது.
எவ்வாறெனினும், தடம் புரண்ட ரயிலினை தண்டவாளத்தில் நிமிர்த்தி வைப்பதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.