நிர்மலா சீதாராமன் இலங்கை வந்தடைந்தார்!

Date:

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார்.

அவரது இந்த விஜயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களுடனான சந்திப்புகள் இன்று இடம்பெறவுள்ளன.

அதேபோன்று திருகோணமலைக்கு விஜயம் செய்யும் இந்திய நிதி அமைச்சர் அங்கு State Bank of India வின் கிளையொன்றையும் திறந்துவைக்கவுள்ளார்.

நாளைய தினம் கொழும்பில் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மலையகம் 200’ நிகழ்விலும் அவர் பங்கேற்க உள்ளார்.

மேலும் யாழ்ப்பாணம் செல்லும்  நிர்மலா சீதாராமன் அங்கும் State Bank of India வங்கி கிளை ஒன்றை திறந்து வைக்கிறார். மேலும் யாழ்ப்பாண பொது நூலகம், யாழ்ப்பாண கலாசார மையம் ஆகியவற்றையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிடுவார். இந்த பயணத்தின் போது வழிபாட்டு தலங்களில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட உள்ளது.

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...