அர்ஜூன ரணதுங்க தலைமையில் நியமிக்கப்பட்ட புதிய இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு தடை உத்தரவு!

Date:

இலங்கை கிரிக்கெட்டை கட்டியெழுப்ப நேற்று திங்கட்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவால் நியமிக்கப்பட்ட இடைக்காலக் குழுவின் (SLC) செயல்பாடுகள் மற்றும் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவிற்கு அமைய, மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவு 14 நாட்களுக்கு அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி அண்மைக்காலமாக பாரிய தோல்விகளை சந்தித்துவந்த நிலையில் இலங்கை அணிமீது கடும் அதிருப்திகள் எழுந்தன.

இதனால் அணியை மீள கட்டியெழும்பும் நோக்கில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இடைக்கால குழுவொன்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவால் நேற்று நியமிக்கப்பட்டது.

என்றாலும், இந்த தீர்மானத்துக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் தலைவர் ஷம்மி சில்வா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விளையாட்டு அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படப்டது.

மேலும், இந்த விவகாரமானது கிரிக்கெட் நிர்வாகத்திற்குள் சர்ச்சையையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இடைக்காலக் குழுவில் அர்ஜுன ரணதுங்க தலைவராக செயற்பட இருந்ததுடன் எஸ்.ஐ.இமாம், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி உபாலி தர்மதாச, ரகித ராஜபக்ஷ, ஹிஷாம் ஜமால்டீன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையிலேயே தற்போது இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...