இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே போர் தொடங்கி 32 நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது வான், கடல் மற்றும் தரை வழியாக மும்முனை தாக்குதலை இஸ்ரேல் படை தீவிரப்படுத்தி உள்ளது.
காசாவில் உள்ள மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள், தேவாலயங்கள், பொதுமக்கள் வாழ்விடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இஸ்ரேல் சரமாரியாக குண்டுகளை வீசி வருகிறது.
இந்த அதிரடி தாக்குதலில் கட்டிடங்கள் இடிந்து விழுவதோடு மட்டுமல்லாது அப்பாவி பொது மக்களும் உயிர் இழந்து வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதலால் காசா நகரமே உருக்குலைந்துவிட்டது.
இந்நிலையில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
அதற்கமைய நேற்று 07ம் திகதி நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோ புகையிரத நிலையத்தில் காஸாவுக்கு ஆதரவு தெரிவித்து அங்கு படுகொலை செய்யப்படும் அப்பாவி மக்களின் கவலைக்கிடமான நிலையை காட்சிப்படுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
🚨🚨 Activists lying on the ground of the central train station in the city of Oslo, in a way that symbolizes the Palestinian victims; to express their condemnation of the Israeli massacres, and their solidarity with the Gaza Strip.#GazaHolocaust #Gaza #CeasefireForGazaNOW pic.twitter.com/JONBSbaLKq
— 𝙲𝚁𝙸𝚂𝚃𝙸𝙰𝙽𝙾 (@World_2040) November 7, 2023