இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களை நிறுத்துமாறு கோரி ஐ.நா அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மகஜர் கையளிப்பு!

Date:

காஸாவில் மனிதாபிமானமாற்ற முறையில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் மனித படுகொலையையும், கொடூர தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபை தலையிட வேண்டும் என கோரிக்கை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் 159 க்கு மேற்பட்டோரின் கையெழுத்துடன் தயாரிக்கப்பட்ட மகஜர் இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள ஐ. நா அலுவலகத்தில் கையளிக்கப்பட உள்ளது.

இந்த மகஜரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டதரணி எச்.எம்.எம். ஹரீஸ், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான் ஆகியோர் இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள
ஐ. நா அலுவலகத்தில் வைத்து  அதிகாரிகளிடம் கையளிக்கவுள்ளனர்.

இந்த மகஜரில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிரிசேன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட கட்சி தலைவர்கள், முன்னாள்  அமைச்சர்கள், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கையெழுத்திட்டு

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...