இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தரமற்ற தடுப்பூசி மோசடி தொடர்பில் அரசாங்க மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் மருந்தாளுநர் ஆகியோரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டதையடுத்து, மருத்துவ வழங்கல் துறை அதிகாரிகள் குழு ஒன்று நிறுவனத்தை விட்டு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தரமற்ற தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஏற்கனவே பொலிஸ் காவலில் உள்ள நிலையில், சுகாதார அமைச்சின் பல உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் அரசியல் அதிகாரம் உள்ள ஒருவர் தொடர்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கொடுக்கல் வாங்கலுக்கு பெயர் சூட்டப்பட்ட சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரின் பதவிக்காலம் கடந்த 18ஆம் திகதியுடன் முடிவடைந்தது. மேலும் அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.