அரபு எழுத்தணிக் கலை மேம்பாட்டுக்காக, அரபு எழுத்தணிக் கலை சங்கத்தினால் நடாத்தப்பட்ட இரு நாள் வதிவிட பயிற்சி நெறி!

Date:

முஸ்லிம்களின் பாரம்பரிய கலைகளின் முக்கிய இடம் வகிக்கின்ற அரபு எழுத்தணிக்கலை சமூகத்தில் இருந்து மறைந்து போயிருந்த சூழ்நிலையில் இக்கலையை மீண்டும் புத்துயிர் ஊட்டி அதன் மூலம் முஸ்லிம்களின் பாரம்பரியத்தையும் கலை உணர்வையும் புத்துயிரூட்டும் ஒரு சிறப்பான பணியில் இலங்கை அரபு எழுத்தணிக் கலை சங்கம் ஈடுபட்டு வருகின்றது.

அதற்கமைய, இலங்கை அரபு எழுத்தணி சங்கம், 20 அரபு எழுத்தணி கலை ஆர்வலர்களுக்கு 2 நாள் வதிவிடப் பயிற்சிநெறியை கடந்த  18-19 ஆம் திகதிகளில் இரத்மலானை பள்ளிவாசலில் மற்றும் NEST அகடமியில் நடாத்தியது.

இந்த பயிற்சி நெறியை அங்கீகரிக்கப்பட்ட அரபு எழுத்தணி கலைஞரான உஸ்தாஸ் ஜே.எம்.உவைஸ் நடத்தினார்.

அரபு எழுத்துக்களை இலங்கையில் மேம்படுத்தும் நோக்கத்துடன் ‘அரபு எழுத்தணி சங்கம்’ 2017 இல் கலை ஆர்வலர்களால் ஸ்தாபிக்கப்பட்டது.

சர்வதேச ரீதியில் போற்றப்படும் அரபு  எழுத்துக்களை இலங்கையில் மேம்படுத்துவதே இந்த பயிற்சி நெறியின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.

அதற்கமைய முதன் முதலாக 2018ஆம் ஆண்டு டிசம்பரிலும் இரண்டாவது பயிற்சி நெறி 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் சீனாவைச் சேர்ந்த ஹாஜி நூர்தீன் உஸ்தாஸ் பந்தர் மற்றும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த இரண்டு கல்வியாளர்கள் இலங்கைக்கு வருகைத் தந்து நடத்தினார்கள்.

இதேவேளை இலங்கை அரபு எழுத்தணி சங்கம் டிசம்பர் 2024 இல் ஒரு கண்காட்சியொன்றையும் ஏற்பாடு செய்யவுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...