பதுளையில் மண்மேடு சரிந்தமையினால் இரண்டு யுவதிகள் உயிரிழந்துள்ளனர்.
உடுவர, ஹாலிஎல வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. பெய்து வரும் கடுமையான மழை காரணமாக வீட்டின் மீது பின்புறமாக மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
20 மற்றும் 22 வயதுடைய வயதான யுவதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மண் அகழ்வில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளனர்.