பேருவளை ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் புதிய மாணவர் பிரவேசப் பரீட்சை – 2023 (பிற்போடப்பட்டது) டிசம்பர் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெறும்.
2023/2024ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை (முஸ்லிம் ஆண்) தெரிவு செய்வதற்கான நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் 2023/12/09 மற்றும் 10ஆம் திகதிகளில் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறும்.
09 ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு, வட மத்திய, வட மேல், தென் மற்றும் மேல் மாகாணங்கள்,10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் இடம்பெறும்.
ஏக காலத்தில் மாணவர்கள் பின்வரும் பாட நெறிகளில் பயிற்றுவிக்கப்படுவர்:
முதல் மூன்று வருடங்கள்
1. அடிப்படை இஸ்லாமியக் கற்கைகள்
2. அறபு மொழி
3. க.பொ.த உயர் தரம் (கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகள்)
க.பொ.த உயர் தரத்திற்கு பின்னரான நான்கு வருடங்கள்
1 இஸ்லாமியக் கற்கைகளில் சிறப்புத் தேர்ச்சி
2. பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்பு
பரீட்சாத்திகள் எடுத்து வரவேண்டிய ஆவணங்கள்
1. பிறப்புச் சாட்சிப் பத்திரம்
2 க.பொ.த. (சா.த) பரீட்சை பெறுபேற்று அட்டை
3. ஆள் அடையாள அட்டை
4. மஸ்ஜிதினால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ்
5. பாடசாலை அதிபரினால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ்
6. புலமைச் சான்றிதழ்கள்
பரீட்சாத்திகளின் கவனத்திற்கு,
* நேர்முகப் பரீட்சை காலை 08.00 மணிக்கு ஆரம்பமாகும்.
* எழுத்துப்பரீட்சை நன்பகல் 12.00 மணிக்கு இடம்பெறும்.
* விண்ணப்பப் படிவங்கள் நேர்முகப் பரீட்சை நடைபெறும் தினத்தில் ஜாமிஆ வாயிற்காவல் பகுதியில் விநியோகிக்கப்படும்.
* சேர்வுக் கட்டணம் 20000 ரூபாய்.