கோட்டாபயவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ள ரிஷாட் பதியுதீன்!

Date:

தன்னை அநியாயமாக கைது செய்து தடுத்து வைத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அரச அதிகாரிகள் பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயங்கரவாத விசாரணைப் பிரிவின் (TID) பணிப்பாளருடன் இணைந்து தமது அரசியல் இலாபங்களுக்காக தம்மைக் கைது செய்து 5 வருடங்கள் சிறையில் வைத்திருக்க உத்தேசித்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் தனக்கு எதிராக பொய்யான அறிக்கைகளை வழங்குமாறு தனது எல்லைக்குட்பட்ட அரச அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்ததாகவும், இதன் காரணமாக தமக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் தாம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

TID பணிப்பாளர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக ரிஷாட் பதியுதீன் அறிவித்துள்ளார்.

வழக்குப்பதிவு செய்து குறித்த நபர்களிடம் இழப்பீடு கோருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...