புத்தளம் சாலிஹீன் மஸ்ஜித் நிர்வாகத்தினால் நடாத்தி முடிக்கப்பட்ட 14 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான இஸ்லாமிய கலை கலாசார நிகழ்வில் பங்கு பற்றிய மற்றும் வெற்றியீட்டிய பெண்களுக்கான சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வுகள் அண்மையில் (25) புத்தளம் கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக அமைந்துள்ள மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மேற்படி இந்த போட்டிகளில் சுமார் 950 பெண்கள் கலந்து கொண்டிருந்தனர்.
போட்டியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் மற்றும் முதலாம் நிலை தொடக்கம் பத்தாம் நிலை பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மேடையில் வைத்து வழங்கப்பட்டன.
இதேவேளை போட்டிகளில் முதலாம் இடம் தொடக்கம் மூன்றாம் இடம் வரை பெற்றவர்களுக்கு சான்றிதழ்களுடன் நினைவு சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி போட்டிகளில் 14-16 வயது வரைக்குமான கவிதை போட்டியில்,95 பேரும், கட்டுரைப்போட்டியில் 84 பேரும், எழுத்தணி போட்டியில் 68 பேரும் பங்கேற்றிருந்தனர்.
17- 20 வயது வரைக்குமான கவிதை போட்டியில் 77 பேரும், கட்டுரை போட்டியில் 91 பேரும், எழுத்தணி போட்டியில் 79 பேரும் பங்கேற்றிருந்தனர்.
20 வயதுக்கு மேல் கவிதை போட்டியில் 93 பேரும், கட்டுரை போட்டியில் 115 பேரும், எழுத்தணி போட்டியில் 243 பேரும் பங்கேற்றிருந்தனர்.
புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தினர் இந்நிகழ்வுதனை சிறப்பாக நடாத்தி முடிக்க ஒத்துழைப்பு நல்கி இருந்தனர்.
மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாத்திமா பெண்கள் பாடசாலை மாணவிகள், ஸைனப் பாடசாலையின் மாணவிகள், மணல்குன்று பாடசாலையின் மாணவிகள், வெட்டாளை அசன் குத்துஸ் பாடசாலையின் மாணவிகள், மன்பவுஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகள், பாக்கியதுஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகள், இஸ்லாஹிய்யா பெண்கள் கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் சாலிஹீன் மஸ்ஜித் நிர்வாகம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.