அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும்: மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிடவுள்ள வழிகாட்டல்கள்

Date:

அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்த வழிகாட்டல்களை வெளியிடவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொலிஸ், சிறைச்சாலை, நன்னடத்தை நிலையம் ஆகியன தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நபரொருவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் செயற்பட வேண்டிய விதம், உளநலம் பாதிக்கப்பட்ட நபரை வழிநடத்தும் விதம் மற்றும் சிகிச்சை அளித்தல் என்பன குறித்தும் வழிகாட்டல்கள் வௌியிடப்படும்.

டிசம்பர் 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வில் இந்த வழிகாட்டல்களை வெளியிட எதிர்பார்ப்பதாக அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...