தற்போதுள்ள கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் : கல்வி அமைச்சர்!

Date:

 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை தற்போதைய நிலைமையை விட இலகுவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும், மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் எண்ணியல் திறன்களை அளவிடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் 2022ல் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் மதிப்பீடு செய்யும் நிகழ்வில் கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பரீட்சையில் 100 வீத சித்திகளைப் பெற்று மாணவர்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 30 வீத புள்ளிகளைப் பெறுவதோடு 4ம் மற்றும் 5ம் தரங்களில் வகுப்பறையில் நடத்தப்பட்ட மதிப்பீட்டில் பெறப்பட்ட மதிப்பெண்களில் 30 வீதமான மதிப்பெண்களை மாணவர்கள் பெற வேண்டும் எனவும், இதற்காக தொடர்ச்சியான வருகைப் பதிவை மாணவர்கள் பெற வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஆசிரியர்கள் பாரபட்சமாக நடந்து கொள்வார்கள் என்று சில பெற்றோர்கள் விமர்சிக்கலாம், ஆனால் அவ்வாறான சூழ்நிலைகளுக்கு இடமில்லை என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஆசிரியர்கள் மீது தெளிவான நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

 

Popular

More like this
Related

காசா வரலாற்றில் மிகப்பெரிய இறுதி ஊர்வலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 112 பேரின் உடல்கள் நாளை அடக்கம்!

பாலஸ்தீனப் போராட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் சோகமான இறுதி ஊர்வலத்திற்கு நாளை...

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து பயணியர் இருக்கைகளிலும் இருக்கைப் பட்டி...

சலேவின் இடைக்கால மனு விசாரணை ஒத்திவைப்பு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தனது கைது...

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்...