IMF கடன் வசதி இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும்: அமெரிக்க தூதுவர்

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

தமது ‘X’ தளத்திலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கைக்கான இரண்டாவது தவணை கடன் வசதியை சர்வதேச நாணய நிதியம் (IMF) பெற்றுக்கொடுத்திருப்பது திருப்தியளிப்பதாகவும் கூறியுள்ளார்.

”சர்வதேச நாணய நிதியத்தின் இந்த நடவடிக்கை இலங்கைக்கு ஒரு முக்கியமான படியாகும். இது நாட்டின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல நிலையான சீர்திருத்தங்கள் மற்றும் மேம்பட்ட நிர்வாகத்துக்காக வழிகாட்டலாகவும் அமைந்துள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கான இலங்கையின் பாதைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும்.” என்றும் தூதுவர் ஜுலி சங் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இரண்டாம் தவணை கொடுப்பனவாக இலங்கைக்கு 337 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளது.

 

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...