இஸ்ரேல் தாக்குதலில் அல்-ஜசீரா ஊடகவியலாளர் கொல்லப்பட்டார்!

Date:

காசாவில் பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில்  அல் ஜசீரா அரபு ஊடகவியலாளர் சமீர் அபுதாகா கொல்லப்பட்டார் மற்றும் அவரது நண்பர் வல்தஹ்தூஹ் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் இஸ்ரேலிய இராணுவ தாக்குதலில் காயமடைந்தார்.

கான்யூனிசின் தென்பகுதியில் உள்ள பர்ஹானா பாடசாலை தாக்குதலிற்குள்ளானதை தொடர்ந்து அதனை பார்வையிடுவதற்காக அல் ஜசீராவின் செய்தியாளர் வல்தஹ்தூஹ், புகைப்படப்பிடிப்பாளர் சமீர் அபுதாகாவுடன் அந்த பாடசாலைக்கு சென்றுள்ளார், அவ்வேளை இஸ்ரேலின் ஆளில்லா விமானம் மீண்டும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேல் பத்திரிகையாளர்களையும் அவர்களது குடும்பத்தவர்களையும் இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொள்கின்றது என அல்ஜசீரா தெரிவித்துள்ளது.

மேலும் படுகாயமடைந்த சமீர் அபுதாகாவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு இஸ்ரேல் இராணுவம் பல தடைகளை ஏற்படுத்தி வருவதால் அவருக்கு அவசர சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் போரின் கொடுமையையும், காசா மக்கள் படும் இன்னல்களையும் தனது காணொளி மூலம் உலகுக்கு எடுத்துரைத்து வந்த சமீர் அபுதாகாவை இஸ்ரேல் ராணுவம் கொன்று மௌனமாக்கியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...