காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 90 பேர் வரை உயிரிழப்பு

Date:

வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களில் குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டதோடு 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜபாலியா நகரில் அல்-பார்ஷ் மற்றும் அல்வான் குடியிருப்புத் தொகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாகவும் மேலும் பலரை காணவில்லை என்று வஃபா செய்தி வெளியிட்டுள்ளது.

காயமடைந்தவர்களை மீட்கும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் மேலும் பல உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

ஏற்கனவே நோயாளிகளால் நிரம்பி வழியும் மருத்துவமனைக்கு குழந்தைகள் உட்பட காயமடைந்தவர்கள் பலர், அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...