காதி நீதிமன்ற நீதிபதியை மாற்றக்கோரி புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்!

Date:

புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதியை மாற்றம் செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி பெற்றுத்தரக்கோரியும் புத்தளம் விவசாய காரியாலயத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை (11) காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
“பாதிக்கப்பட்ட பெண்களின் நீதி மையம்” அமைப்பினர் இவ் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் அமைதியாக சுலோகங்களை ஏந்தியவாறு காணப்பட்டனர்.

“காதி நீதிபதியின் முறைகேடான நடவடிக்கைகளை நாம் கண்டிக்கின்றோம்” , ” பணம் இருப்பவர்களிடம் சரிந்து விடுகிறது வழக்கு” , “இந்த காதியின் அநீதிக்கு முடிவில்லையா” , “விதவைகளை உற்பத்தி செய்கிறது காதியின் கரை படிந்த கரங்கள்” , “நீதிக்கான இடத்தில் காதியின் அநீதி நடக்கிறது ” , “சுய தேவைகளுக்காக பெண்களை பயன்படுத்தும் நபர் தண்டிக்கப்படவேண்டும்” எனும் சுலோகங்களை உள்ளடக்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி நின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் காதி நீதிமன்றத்துக்கு முன்பாகவும் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஐக்கிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புத்தளம் மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.எம்.ரிபாய் அவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தார்.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புத்தளம் காரியாலயத்தில் இது தொடர்பான மகஜரை கையளித்து விட்டு கலைந்து சென்றனர்.
(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20)...

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...