பலஸ்தீனுக்கு தனிநாடு வேண்டும்: அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்தார் இஸ்ரேல் பிரதமர்

Date:

காஸாவின் போர் முடிவுக்கு வந்த பின்னர் பலஸ்தீன தனிநாடு அமைக்கப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் வலியுறுத்தலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ, தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

வொஷிங்டனின் இந்த கோரிக்கை குறித்து தான் அமெரிக்காவிடம் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். காஸா போரில் முழுமையாக வெற்றிபெறும் வரை போர் தொடரும்.

ஹமாஸ் அமைப்பின் கிளர்ச்சியாளர்களை முற்றாக அழிப்பதும் அவர்களிடம் சிக்கியுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை மீட்பதுமே இஸ்ரேலின் இலக்கு. இதற்குப் பல மாதங்கள் சொல்லாம் எனவும் இஸ்ரேலியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

காஸா மீது இஸ்ரேல் நடத்தி இராணுவ தாக்குதல்கள் காரணமாக 25 ஆயிரம் பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காஸாவில் 85 வீதமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ள நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இஸ்‌ரேலுக்கு கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்கா உட்பட இஸ்ரேலின் பல நாடுகள் இரு நாடுகள் என்ற தீர்வை வலியுறுத்தி வருகின்றன.

எனினும் பெஞ்சமின் நெதன்யாஹூ அதற்கு இணங்கவில்லை என்பது அவரது கருத்துக்கள் மூலம் தெளிவாகியுள்ளது.

ஜோர்தான் நதிக்கு மேற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும் என அவர் நிபந்தனை விதித்துள்ளார். அந்தப் பகுதி பாலஸ்தீனத்தையும் உள்ளடக்கிய பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...