கப்சோவினால் சமூக ஊடக ஆர்வலர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஆரம்பம்!

Date:

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கியதாக கப்சோ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் “Youth Media Project” வேலைத்திட்டம் கடந்த வெள்ளியன்று (26) கப்ஸோ நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே காமில் இம்டாட் தலைமையில் காரைதீவு பிரதேசத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

GCERF ,HELVETAS நிதியுதவியுடன் GAFSO நிறுவனத்தின் அமுல்படுத்தலில் செயற்படுத்தப்படும் HOPE OF YOUTH வேலைத்திட்டத்தின் கீழ் Youth Media Project ஆனது இடம்பெற்று வருகின்றது.

இவ் வேலைத்திட்டமான அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட 30 சமூக ஊடக ஆர்வலர்களை கொண்டு இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும் இவ் வேலைத்திட்டமானது ஒரு வருட காலமாக இடம்பெறவுள்ளதுடன் இந் நிகழ்வுகளுக்கு வளவாளராக 27ம் ,28ம் திகதிகளில் விடியல் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் றிப்தி அலி கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர்களுக்கு “Digital Story Telling ” சம்பந்தமான தெளிவினை வழங்கியிருந்தார்.

(ஏ. கே. ஹஷான் அஹமட்)

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...