பஹன அகடமி ஏற்பாட்டில் மல்வானை யடிஹேன அல்முஸ்தபா வித்தியாலயத்தில் செயலமர்வு!

Date:

மல்வானை யடிஹேன அல்முஸ்தபா மகா வித்தியாலயத்தில் பஹன மீடியா நிறுவனத்தின் பஹன அகடமி ஏற்பாடு செய்யும் தொடர்பாடல் நுட்பங்களுல் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் தொடர்பான ஒரு நாள் செயலமர்வு எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும்.

வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ்.எம். முஹம்மத் சம்ரிஹான் (நளீமி) தலைமையில் நடைபெறும் இச்செயலமர்வில் நியூஸ்நவ் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் மொஹமட் பியாஸ், முன்னாள் ஊடகத்துறைப் பணிப்பாளர் மாத்தியக்கீர்த்தி ஹில்மி முஹம்மத் (எஸ்.எல்.ஏ.எஸ்), ஊடகத்துறை முதுமாணிப் பட்டதாரி பவாஸ் அன்பியா ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

கருத்தரங்கின் இறுதியில் நடைபெறும் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் பஹனமீடியா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் முஜிப் ஸாலிஹ் மற்றும் ஊர்ப் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

தொடர்பாடல் வழிமுறைகளால் மாணவர்களை வலுவூட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கில் தொடர்பாடல் நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் எதிர்காலப்பயன்பாடு மற்றும் சமூக ஊடகத்தைக் கல்விக்காகப் பயன்படுத்தல் முதலான விடயங்கள் போதிக்கப்பட்டுள்ளன.

பஹன அகடமியானது மாணவர்களையும் இளைஞர்களையும் ஊடகம் சார்ந்த துறையில் வலுவூட்டும் வகையில் AI பாடநெறி, MOJO மற்றும் உலமா ஜெர்னலிஸம் ஆகிய தலைப்புக்களிலும் தொடர் கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...