கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் புதிய தலைவராக கலாநிதி ஃபரீனா ருஷைக் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது கலாநிதி பரீனா ருஸைக் அவர்கள் புவியியல் துறையிsல் சிரேஷ்ட பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.
கலாநிதி ஃபரீனா ருஸைக் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியலில் சிறப்புப் பட்டப்படிப்பைப் படித்து, 1994 இல் BA Hons இரண்டாம் தர உயர் பிரிவில் பட்டம் பெற்றார்.
மேலும், 2005 இல் கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவில் நிரந்தர விரிவுரையாளராக சேர்ந்தார். அதற்கு முன்னர், 1994 முதல் 1999 வரை, அவர் உதவி விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.
1999 முதல் 2005 வரையான காலப்பகுதியில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையில் அவர் பெற்ற அனுபவம், பல்கலைக்கழகத்தில் அவரது கல்வி நடவடிக்கைகளுக்கு கூடுதல் மதிப்பைச் சேர்த்துள்ளது.
கற்பித்தல் தொடர்பான பாடங்கள் உட்பட சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.
கூடுதலாக, அவர் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்காக பல நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள், மாநாடுகள், முதுகலை பட்டப்படிப்புகள்,முதலியன ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்துள்ளார்.
அவர் 2005 முதல் 2019 வரை இலங்கை புவியியலாளர்கள் சங்கத்தின் செயலாளராக பணியாற்றியதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை பீடத்தின் சமூக அறிவியல் மற்றும் மனிதநேயத்திற்கான நெறிமுறைகள் மறுஆய்வுக் குழுவின் செயலாளராகவும் கடமையாற்றினார்.
அதேவேளை 2019 முதல், அவர் மருத்துவ புவியியல் துறையில் பல கட்டுரைகளையும் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுக்குக் கற்பிப்பதற்காக பல்வேறு தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள் மற்றும் செய்தித்தாள் கட்டுரைகளுக்குப் பங்களித்து, வளவாளராகப் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் புதிய தலைவராக கலாநிதி ஃபரீனா ருஷைக் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது கலாநிதி பரீனா ருஸைக் அவர்கள் புவியியல் துறையில் சிரேஷ்ட பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.