வெப்பமான காலநிலை: பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தல்கள்

Date:

அதிக வெப்பமான காலநிலையை கருத்திற் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார அமைச்சினால் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிக வெப்பநிலை நிலவும் நாட்களில் இல்ல விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதை தவிர்க்குமாறும் மாணவர்களை அதிகளவில் நீர் அருந்தச் செய்யுமாறும் சுகாதார அமைச்சின் குறித்த அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சியான காலநிலையில் இன்று முதல் ஓரளவு மாற்றத்தை எதிர்பார்க்க முடியுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...