நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை!

Date:

நாட்டின் பல பகுதிகளில் இன்று (28) வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமேல், மேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் மனித உடலுக்கு உணரும் அளவில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என்பதால் அது குறித்து அவதானம் செலுத்துமாறு அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுப்பது, வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவின் துணை இயக்குநர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதிக வெப்பநிலை காரணமாக தலைவலி, வாந்தி, உடல்வலி, நித்திரை கலக்கம் போன்ற நோய் அறிகுறிகள் தோன்றக்கூடும் என்று குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா சுட்டுக்காட்டியுள்ளார்.

“இன்றும், வரும் நாட்களிலும் கடுமையான வெப்பத்தை உணர்வோம். இதனுடன் உடலில் இருந்து வியர்வை அதிகமாக வெளியேறும். வியர்வையுடன் உப்பும் தண்ணீரும் உடலை விட்டு வெளியேறும். இதன் காரணமாக நாம் அனைவரும் அசௌகரியம் அடைவோம். வாந்தி, தலைவலி, உடல் வலி, , பசியின்மை, மயக்கம் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படும்.

இவற்றைத் தடுக்க தண்ணீர் மற்றும் நீர் அகாரங்களை அதிகம் குடிக்க அருந்த வேண்டும். இயற்கை பானங்களான கஞ்சி வகைகள், தேசிக்காய், தோடம்பழம், இளநீர், தேங்காய் நீர் போன்றவை சிறந்ததாகும்.

இந்நிலைமை காரணமாக சிறுவர்களுக்கு தோல் நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...