நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் வாரத்தில் கையளிக்கப்படும்

Date:

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கைச்சாத்திடப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் கையெழுத்திட்டுள்ள இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் உத்தர லங்கா சபாகய என்பன அறிவித்துள்ளன.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் சில சரத்துகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்துக்கு மாறாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அதனை நிறைவேற்றுவதற்கு அனுமதித்ததாக தெரிவித்து எதிர்க்கட்சிகள் நேற்று முன்தினம் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட ஆரம்பித்தன.

குறித்த செயற்பாடு அரசியலமைப்பை மீறுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

Popular

More like this
Related

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...