புதிய மின் இணைப்புக்கான கட்டணத்தை தவணை முறையில் செலுத்த வாய்ப்பு: கஞ்சன விஜேசேகர

Date:

புதிய மின் இணைப்புக்காக அறவிடப்படும் கட்டணத்தை நுகர்வோர் தவணை முறையில் செலுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம் தர்மசேன இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்

அதற்கு பதிலளித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர,

நுகர்வோரின் நலனை கருத்திற்கொண்டு புதிய மின் இணைப்புக்கான கட்டணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கான திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன், இதற்காக நுகர்வோர் புதிய மின் இணைப்புக்கான மொத்த கட்டணத்தில் 25 சதவீதத்தை செலுத்த வேண்டும். எஞ்சிய கட்டணத்தை 10 அல்லது 12 மாதங்களில் செலுத்த முடியும்.

இதற்கு பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியுள்ளதுடன், உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதேவேளை, மின்சார பட்டியலுக்கான கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கான மின் துண்டிக்கப்பட்டு மீள் இணைப்பதற்கான அபராதத் தொகையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, வலுசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கமைய, 1,300 ரூபாவாக காணப்பட்ட குறித்த அபராத தொகையை 800 ரூபாவாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...