ஒஸ்கர் மேடையில் ஒலித்த போர் குரல்: விருது வழங்க ஆடைகளின்றி வந்த ஜான் சீனா

Date:

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் ஓஸ்கர் விருது விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

உலகளவில் மிகவும் முக்கியமான சினிமா விருது விழாவாக ஓஸ்கர் கருதப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஓஸ்கர் விருது விழாவில் உக்ரைன் நாட்டின் 20 Days In Mariupol எனும் ஆவணப்படத்துக்கு விருது வழங்கப்பட்டது.

அந்த விருதை பெற்ற அதன் இயக்குநர் Mstyslav Chernov ரஷ்யாவின் போர் பற்றியும் அதன் பாதிப்புகள் குறித்தும் உருக்கமாக பேசினார்.

இதேவேளை சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஓஸ்கர் விருதினை அறிவிக்க ஜான் சீனா முழு நிர்வாணமாக மேடை ஏறி அரங்கத்தையே அதிர வைத்துள்ளார்.

அதன் பின்னர், மேடையிலேயே அவசர அவசரமாக ஆடை மாற்றி சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை புவர் திங்ஸ் படத்துக்கு வழங்கினார்.

அவர் விருதை அறிவித்த பிறகு, ஆஸ்கர் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் என்பவர் திரைக்காக வைக்கப்பட்டிருந்த துணியை எடுத்து ஜான் சீனாக்கு அணிவித்தார்.

WWE நட்சத்திர வீரரான ஜான் சீனா ஆடைகளின்றி மேடைக்கு வந்ததால் அங்கிருந்த பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...