சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளை பாதுகாக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்

Date:

இலங்கையில் இந்துக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி தின பூஜை வழிபாடுகளின் போது சிலர் கைது செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களில் தலையீடு செய்வதை உடன் முடிவுக்கு கொண்டுவருமாறு இலங்கை அரசாங்கம் தொல்பொருள் திணைக்களத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்துக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையின சமூகங்களின் மத உரிமைகளை உறுதிப்படுத்துமாறு பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத்தரப்பினருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...