காசாவில் போர் நிறுத்தம் : ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றம்: வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என அமெரிக்காவுக்கு இஸ்ரேல் கண்டனம்

Date:

காசாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக் குழுவினரிடையே ஐந்து மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து வரும் நிலையில், புனித ரமழான் மாதத்தை கருதி காசா பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பாதுகாப்பு கவுன்சிலின் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களால் இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் அமெரிக்கா பங்கேற்காத நிலையில், 15 நாடுகளை கொண்ட கவுன்சிலின் மற்ற உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர்.

இதன்மூலம் காசாவில் போர் நிறுத்தத்தை தற்காலிகமாக அமல்படுத்துவதற்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை தடுத்து நிறுத்தத் தவறிவிட்டதாக இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பது குறித்த எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில், இந்த தீர்மானத்தை அனுமதிப்பதன் மூலம் “கொள்கை நிலைப்பாட்டில் இருந்து அமெரிக்கா பின்வாங்கியிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார்.

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...