புறக்கோட்டையிலுள்ள மிதக்கும் சந்தை மார்க்கெட் ஜப்பான் வசமாகிறது..!

Date:

புறக்கோட்டையிலுள்ள மிதக்கும் சந்தையை ஜப்பானிய முதலீட்டாளர் ஒருவருக்கு முப்பது வருட குத்தகை அடிப்படையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான ஆரம்ப புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (27) பத்தரமுல்ல நகர அபிவிருத்தி அதிகார சபையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் மற்றும் ஜப்பானிய முதலீட்டாளரான அகிரா ஹிரோஸ் இடையே இடம்பெற்றது.

அதன்படி, புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்தின் மேலாண்மை மற்றும் இயக்கம் இந்த ஜப்பானிய முதலீட்டின் மூலம் மேற்கொள்ளப்படும்.

மிதக்கும் வணிக வளாகத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபை உரிய முறையில் கையாளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொருளாதார சிக்கல்கள் காரணமாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நிதியைப் பயன்படுத்தி இதனை அபிவிருத்தி செய்வது கடினம் என்பதால் இதனை அரச தனியார் பங்காளித்துவத்தின் கீழ் அல்லது அரச தனியார் பங்காளித்துவத்தின் கீழ் அபிவிருத்தி செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜப்பானிய நகரம் மற்றும் மிதக்கும் சந்தை என்ற கருப்பொருளில் மிதக்கும் நகரம் 6 மாதங்களில் உருவாக்கப்பட உள்ளது. இந்த மிதக்கும் சந்தை 92 கடைகளைக் கொண்டுள்ளது.

தற்போது அங்கு வியாபாரம் செய்து வரும் கடை உரிமையாளர்களுக்கு எவ்வித அநீதியும் ஏற்படாத வகையில் இதனை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வழக்கு!

பிபிசி செய்திச் சேவையிடமிருந்து குறைந்தபட்சம் 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி...

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கை...

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) நூற்றாண்டு விழா

நாட்டின் முதன்மை இலத்திரனியல் ஊடகத் தொடர்பாடல் நிறுவனமாகக் கருதப்படும் இலங்கை ஒலிபரப்புக்...

இந்திய நிதியுதவியின் கீழ் மலையகத்தின் 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

லைன் அறைகளுக்கு பதிலாக தனி வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எல்கடுவ...