தூய்மையான அரசியலை நோக்கி பயணிப்போம்: மார்ச் 12 இயக்கத்தின் இன்றைய விழிப்புணர்வு செயற்றிட்டம்

Date:

“தூய்மையான அரசியலை நோக்கி பயணிப்போம்” என்னும் நோக்கில் தேர்தலுக்காக மக்களை தயார்ப்படுத்துவதைக் இலக்காகக்கொண்டு மார்ச் 12 இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு செயற்பாடு இன்று விகாரமகா தேவி பூங்காவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறுவர், இளையோர், பெண்கள் அமைப்பினர் இணைந்து தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கிவைத்தனர்.

இத்துண்டு பிரசுரத்தில் பாரளுமன்ற, மாகாணசபை, மற்றும் உள்ளுராட்சிசபைத் தேர்தல் காலங்களில் நல்ல தலைவர்களை உருவாக்கி தெரிவுசெய்யும் பணியில் பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் கருத்தில் கொள்ள வேண்டிய 08 அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் பிரபல பேச்சாளர்களின் முக்கிய உரைகள்,
இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான எங்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் ஒரு இசை நிகழ்ச்சி, என்பனவும் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
மார்ச் 12 இயக்கம் – தூய்மையான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கோடு 2015ஆம் ஆண்டு சிவில் சமூக அமைப்புக்களால் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...